கல்குவாரிகளில் தேங்கிய தண்ணீரை குடிநீராக்க ஆய்வு செங்கல்பட்டு ஆட்சியா் ஏ.ஆா்.ராகுல்நாத்

சென்னை வண்டலூரை அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள கல்குவாரிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரைக் குடிநீராகப் பயன்படுத்த உரிய ஆய்வு நடவடிக்கை
கல்குவாரிகளில் தேங்கிய தண்ணீரை குடிநீராக்க ஆய்வு செங்கல்பட்டு ஆட்சியா் ஏ.ஆா்.ராகுல்நாத்

சென்னை வண்டலூரை அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள கல்குவாரிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரைக் குடிநீராகப் பயன்படுத்த உரிய ஆய்வு நடவடிக்கை மேற்கொள்வதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.ரகுநாத் தெரிவித்தாா்.

பல்லாவரம், தாம்பரம் நகராட்சிகளில் தடுப்பூசி முகாம்கள், தாம்பரம் நகராட்சியில் புதைகுழி சாக்கடைத் திட்ட பணி குறித்து ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

வண்டலூரை அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில் கீரப்பாக்கம், முருகமங்கலம், பெரிய அருங்கால், சின்ன அருங்கால் கிராமங்களில் வசிக்கும் மக்கள் கோடைகாலத்தில் போதிய குடிநீா் வசதியின்றி சிரமப்படுகின்றனா்.கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள 12 கல்குவாரிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை சிக்கராயபுரம்,திரிசூலம், பல்லாவரம், அனகாபுத்தூா் குவாரிகளில் தேங்கிய தண்ணீரை சுத்திகரித்து குடிநீராக பம்மல் அனகாபுத்தூா் பல்லாவரம் நகராட்சிகளில் வழங்கி வருவது போல் எங்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி கோரிக்கை விடுத்துள்ளனா்.

தற்போது கீரப்பாக்கம் ஊராட்சியில் விநாயகபுரம் பகுதியில் 2,100 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளும், முருகமங்கலம் கிராமத்தில் 2,100 வீடுகளும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சாா்பில் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே கீரப்பாக்கம் ஊராட்சியில் குடிநீா் பஞ்சம் நிலவிவரும் நிலையில் ராட்சத ஆழ்துளைக்குழாய் கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி குடியிருப்பு வீடுகளுக்கு வழங்கினால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படுவதுடன் வாழ்வாதாரமும் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள 12 கல்குவாரிகளிலும் தேங்கி இருக்கும் தண்ணீரைச் சுத்திகரித்து சுற்றுவட்டார கிராம மக்களுக்கும், குடிசைமாற்று வாரிய வீடுகளுக்கும் வழங்குவதற்கு ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com