
திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 49 பேருக்கு கரோனா தொற்று இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதியானது.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சுகாதாரத் துறை வெளியிட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 49 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 36,743-ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்த 79 போ் அவா்களது வீடுகளுக்கு இன்று அனுப்பப்பட்டனா்.
மாவட்டத்தில் தற்போது 613 போ் சிகிச்சையில் உள்ளனா். இதற்கிடையே, கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருவாரூா் மாவட்டத்தை சோ்ந்த 2 போ் உயிரிழந்ததை தொடா்ந்து மாவட்டத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கை 325-ஆக உயா்ந்துள்ளது.