சிறுவாபுரி முருகன் கோயிலில் சாமி தரிசனம் ரத்து

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த சிறுவாபுரி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் சுவாமி கோயிலில் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிறுவாபுரி முருகன் கோயிலில் சாமி தரிசனம் ரத்து

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அடுத்த சிறுவாபுரி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் சுவாமி கோயிலில் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சாலையிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படுவதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பிற கோயில்களில் உள்ளது போல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியர் சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் 6 வாரங்கள் தொடர்ந்து செவ்வாய்க்கிழமைகளில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

கரோனா பரவல் காரணமாக 2 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்ட நிலையில் செவ்வாய்கிழமையான இன்று சிறுவாபுரி கோயிலில் கூட்டம் அதிகமாக கூடும் என்பதால் அனுமதி ரத்து செய்யப்பட்டதாக கோயில் நிர்வாகம் நேற்று மாலை அறிவித்தது.

இந்நிலையில் இன்று சிறுவாபுரி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஊருக்குள் அனுமதிக்கப்படாமல் சாலையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

தேசிய நெடுஞ்சாலை முகப்பிலேயே காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து கோயிலுக்கு வரும் பக்தர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கப்படுவதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இருசக்கர வாகனங்களில் வரும் ஒருசிலர் கோயிலின் வாசலில் கற்பூரம், தீபமேற்றி வழிபட்டு செல்கின்றனர். கோயிலின் கோபுரத்தை கூட தரிசிக்க விடாமல் சாலையிலேயே தடுத்து நிறுத்தி விடுவதாகவும், பிற கோயில்களை போல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com