அண்ணா அறிவுரையின்படி ஆட்சி நடைபெறும்: மு.க.ஸ்டாலின்

மக்களிடம் செல், மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ்,  மக்களுக்காகப்  பணியாற்று என்ற அறிவுரையை எப்போதும் அறிஞர் அண்ணா வழங்குவார்:  மு.க.ஸ்டாலின் 
செய்தியாளர் சந்திப்பில் மு.க.ஸ்டாலின்
செய்தியாளர் சந்திப்பில் மு.க.ஸ்டாலின்

அண்ணாவின் அறிவுரையின்படி ஆட்சி நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

முதல்வரான பிறகு முதல்முறையாக காஞ்சிபுரத்திலுள்ள அறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, காஞ்புரத்தில் அறிஞர் அண்ணாவில் இல்லத்தில் அவரிடம் வாழ்த்து பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் எண்ணம் நிறைவேறியுள்ளது.

எங்களை ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா வாழ்ந்த இல்லத்திற்கு வருகை புரிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

மக்களிடம் செல், மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ், மக்களுக்கு பணியாற்று என்ற அறிவுரையை எப்போதும் அறிஞர் அண்ணா வழங்குவார்.

அவர் தந்த அறிவுரைப்படி இந்த ஆட்சி பீடு நடைபோடும். அவ்வாறுதான் அண்ணா இல்லத்தின் வைக்கப்பட்டிருந்த குறிப்பேடில் கையெழுத்திட்டேன்.

நிதி நிலை அறிக்கை வெளியிடும்போது அதில் அண்ணாவின் பெயரிலும் திட்டங்கள் தொடங்கப்படும் என்று கூறினார்.  

முதல்வருடன் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் கா.செல்வம், எம்எல்ஏக்கள் சுந்தர், எழிலரசன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

முன்னதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, எஸ்.பி.சுதாகர் ஆகியோர் முதல்வருக்கு புத்தகம்  பரிசாக வழங்கினார்கள். வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார், காஞ்சிபுரம் சரக டிஐஜி மா. சத்யபிரியா, காஞ்சிபுரம் எஸ்பி டாக்டர் எம் சுதாகர், ராணிப்பேட்டை எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com