புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அண்ணா இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்தார்.

News image
Updated On :30 ஜூன் 2021, 7:02 am

DIN


காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்தார்.

அதனைத் தொடர்ந்து அண்ணாவின் உருவ சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Story image

முதல்வரான பிறகு முதல் முறையாக அண்ணா நினைவு இல்லத்திற்கு வருகை புரிந்த மு.க.ஸ்டாலினுக்கு, கிருமிநாசினி தெளித்து மற்றும் வெப்பநிலைப் பரிசோதனை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு, கூடங்களில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை ஸ்டாலின் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் இணைந்து தொழில்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கார் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட உள்ளார். மாலையில் மின்னணு வாகன உற்பத்தி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.