மானாமதுரையில் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ஆ. தமிழரசி 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) தொகுதியில் இரண்டாவது முறையாக திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தமிழரசி  வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மானாமதுரையில் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ஆ. தமிழரசி 
Published on
Updated on
1 min read

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) தொகுதியில் இரண்டாவது முறையாக திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தமிழரசி  வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மானாமதுரை சட்டமன்றத் தொகுதியை இந்த முறை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்காமல் திமுக நேரடியாக போட்டியிட வேண்டும் என திமுக தொண்டர்கள் கட்சித் தலைமையை வலியுறுத்தி வந்தனர். 

காங்கிரஸ் கட்சிக்கு மானாமதுரை ஒதுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புக்கு  கடந்த வியாழக்கிழமை மாலை வெளியான காங்கிரஸ் தொகுதி பட்டியலில் விடை கிடைத்தது.  பட்டியலில் மானாமதுரை இல்லாததால் இத்தொகுதியில் திமுக போட்டியிடுவது உறுதியானது.

அதன்பின் திமுக சார்பில் மானாமதுரை தொகுதியில் யாரை வேட்பாளராக கட்சித் தலைமை அறிவிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு திமுக கட்சியினரிடம் இருந்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 

அதில் மானாமதுரை தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் தமிழரசி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இரண்டாவகு முறையாக மானாமதுரை தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் பற்றிய சுயவிபரம்

பெயர் - ஆ.தமிழரசி(45)
தந்தை பெயர் - ஆறுமுகம்
கணவர் பெயர் -இரவிக்குமார்
கல்வித்தகுதி - பி.காம்
தொழில் - விவசாயம்
முகவரி - 25, கணபதிநகர், அந்தநேரி, அழகர்கோயில்ரோடு, கடச்சனேந்தல், மதுரை
பிள்ளைகள் - இரண்டுபேர்

அரசியல் அனுபவம் - நாகணகுளம் திமுக கிளைக்கழக பிரதிநிதி, 2001-ல் ஒன்றியக்கவுன்சிலராக வெற்றி பெற்று மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத் தலைவர், 2006-ல் சமயநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், திமுக ஆட்சியில் ஆதிதிராவிடநலத்துறை அமைச்சர்.

கட்சிப்பதவி - திமுக மாநில மகளிரணி துணைச் செயலாளர், மதுரை மாநகர வடக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்.

2011-ல்  மானாமதுரை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளரிடம் தோல்வி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com