
வேட்பாளர்கள் பட்டியலுடன் கருணாநிதி திருவுருவப் படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பட்டியலுடன் கருணாநிதி திருவுருவப் படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இன்று பிற்பகல் 12.30 மணியளவில் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதனையொட்டி சென்னை கோபாலபுரத்திலுள்ள கருணாநிதி இல்லத்திற்கு மு.க.ஸ்டாலின் சென்றார்.
அங்கு அவரது தந்தையும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி படத்தின் முன்பு வேட்பாளர்கள் பட்டியலை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது தாயார் தயாளு அம்மாளிடமும் ஸ்டாலின் ஆசி பெற்றார்.
பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கருணாநிதி இல்லாமல் முதல் சட்டப்பேரவைத் தேர்தலை திமுக சந்திக்கிறது. மேலும், ஸ்டாலின் திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டபிறகு நடக்கும் முதல் சட்டப்பேரவைத் தேர்தலாக இந்த தேர்தல் உள்ளது.தேர்தலாக இந்த சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளது.