சென்னை: வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
திமுக போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திமுகவின் வேட்பாளர் பட்டியல் முதல் கதாநாயகன் என்றால், இரண்டாவது கதாநாயகன் தேர்தல் அறிக்கை என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், டி.ஆர். பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் தேர்தல் அறிக்கையை வாசித்தார்..
- திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
- சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
- அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.
- கரோனா நிவாரணத் தொகையாக ரூ.4,000 வழங்கப்படும்.
- நடைபாதை வாசிகளுக்கு இரவு நேர காப்பகங்கள் திறக்கப்படும்.
- ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
- பத்திரிகையாளர்கள், ஊடகத் துறையினர் நலனுக்கு தனி வாரியம் அமைக்கப்படும்.
- ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்.
- ரேஷனில் உளுத்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும்.
- ரேஷனில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும்.
- முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும்.
- மகளிர் பேறுகால உதவித்தொகை ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்படும்.
- இந்து ஆலயங்களை சீரமைக்க ரூ.1000 கோடியும், மசூதி, தேவாலயங்களை சீரமைக்க ரூ.200 கோடியும் ஒதுக்கீடு.
- வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
- தமிழகம் முழுவதும் கலைஞர் பெயரில் உணவகம் திறக்கப்படும்.
- பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வண்டி வழங்கப்படும்.
- பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாள்களில் தீர்வு காணப்படும்.
- இந்து கோவில்களுக்கு சுற்றுலா செல்ல ஒரு லட்சம் பேருக்கு நிதி வழங்கப்படும்.
- பள்ளி மாணவர்களுக்கு காலையில் ஊட்டச்சத்தாக பால் வழங்கப்படும்.
- தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
- மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.
- தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு முறை நடைமுறைப்படுத்தப்படும்.
- மகளிருக்கு பேறுகால விடுமுறை 12 மாதங்களாக உயர்த்தப்படும்.
- தமிழகம் முழுவதும் 200 தடுப்பணைகள் அமைக்கப்படும்.
- விவசாயிகள் மின் மோட்டார் வழங்க ரூ.10 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.
- புதிதாக 2 லட்சம் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
- பகுதி நேர ஊழியர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள்.
- சொத்து வரி அதிகரிக்கப்படாது.
- நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
- நகரங்களில் ஆட்சேபம் இல்லாத நிலங்களுக்கு பட்டா வழங்கப்படும்.
- கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
- முதியோர் உதவித் தொகை ரூ.1500 ஆக உயர்த்தப்படும்.
- நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2500 ஆக உயர்த்தப்படும்.
- இட ஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும்.
- ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.
விரிவாகப் படிக்க திமுக தேர்தல் அறிக்கையை முழுவதும் படிக்க.
- மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
- தமிழ் எழுத்து வரி வடிவம் சிதைக்கப்படுவதைத் தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும்.
- அரசுப் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா நாப்கின் வழங்கப்படும்.
- கடன் சுமையை சரிப்படுத்த பொருளாதார குழு அமைக்கப்படும்.
- மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைப்படுத்தப்படும்.
- தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு 75 சதவீத வேலை வாய்ப்பு.
- பக்கிங்காம் கால்வாய் சீரமைக்கப்படும்.
- பெட்ரோல் விலையில் ரூ.5-ம், டீசல் விலையில் ரூ.4-ம் குறைக்கப்படும்.
- சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியமாக வழங்கப்படும்.
- 8-ஆம் வகுப்பு வரை தமிழ் பாடம் கட்டாயமாக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவாரூா் தொகுதி தவாக வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு

வீட்டில் எரிவாயு சிலிண்டா் வெடித்து இளைஞா் உயிரிழப்பு சதியா? போலீஸாா் விசாரணை

2ஆவது பிஎம்எல்ஏ வழக்கில் அல்ஃபலாஹ் குழுமத் தலைவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

ஹரிநகா் இளம்பெண் ஆணவக் கொலையில் தாய் கைது
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

