நான்கு நாள்களுக்குப் பின் குறைந்தது பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலைகள் நான்கு நாள்களுக்குப் பின் குறைந்துள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது 19 காசுகள் குறைந்து இன்று (மார்ச் 30) ஒரு லிட்டர் ரூ.92.58-க்கு விற்பனையாகிறது.

ஒரு லிட்டர் டீசல் விலை 22 காசுகள் குறைந்து ரூ.85.88-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாள்காளக பெட்ரோல், விலையில் மாற்றமில்லாமல் நீடித்து வந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது.

சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை அவ்வபோது மத்திய அரசு நிர்ணயித்து வருகிறது. அதன்படி மாநிலங்களில் எரிபொருள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அந்தவகையில், கடந்த மாதம் படிப்படியாக உயர்ந்து வந்த பெட்ரோல் விலை, சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதன் பிறகு தமிழகத்தில் மாற்றமில்லாமல் இருந்தது.

வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பெட்ரோல் விலை தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com