முதல்வராகப் பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்!

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என கூறி பதவியேற்றுக் கொண்டார். 
முதல்வராகப் பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்!

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..' எனத் தொடங்கி பதவியேற்றுக் கொண்டார். 

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக 125 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. தொடர்ந்து மே 4-ஆம் தேதி நடைபெற்ற திமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை திமுக குழுத் தலைவராக ஸ்டாலின் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

அதைத் தொடா்ந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சியைச் சோ்ந்த 8 உறுப்பினா்களையும் சோ்த்து மொத்தம் 133 சட்டப்பேரவை உறுப்பினா்களின் ஆதரவுக் கடிதத்துடன் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினாா். அதை ஏற்று மு.க.ஸ்டாலினை ஆட்சியமைக்க ஆளுநா் அழைப்பு விடுத்தாா்.

இதையடுத்து கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் விழா எளிமையாக நடைபெறுகிறது. 

விழாவின் தொடக்கமாக, முதல்முறையாக தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்கும்போது, 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..' எனத் தொடங்கி ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். 

தொடர்ந்து, மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து 33 அமைச்சா்கள் பதவியேற்கின்றனர். அமைச்சர்களுக்கும் ஆளுநா் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com