
தமிழகத்தில் தொடர்ந்து 2-வது நாளாக 30 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 297 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழகத்தில் புதிதாக 30,621 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 14,99,485-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 297 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16,768-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 19,287 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக 12,98,945-ஆக உயர்ந்துள்ளது.
இன்று 1,58,129 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 1,83,772 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக சென்னையில் 6,991 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 88 பேர் உயிரிழந்துள்ளனர்.