
துர்காபூர்: மேற்கு வங்கம் மாநிலம், தூர்காபூரில் இருந்து ரயில் மூலம் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகம் வருகிறது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: மேற்கு வங்கம் மாநிலம், தூர்காபூரில் இருந்து விரைவு ரயில் மூலம் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகம் வருகிறது. இதற்காக கொள்கலன்களில் ஆக்சிஜன் நிரப்பப்பட்டது. இதனை ஏற்றிக்கொண்டு நேற்றிரவு புறப்பட்ட விரைவு ரயில் இன்று மாலை சென்னையை வந்தடையும் என தகவல் வெளியாகி உள்ளது.
ரயில் மூலம் தமிழகத்துக்கு ஆக்சிஜன் கொண்டு வரப்படுவது இதுவே முதல் முறையாகும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.