கிருஷ்ணகிரியில் தொடர்ந்து ஓராண்டாக மூலிகைக் கஞ்சி வழங்கும் ஆன்மிக அமைப்பினர்

கிருஷ்ணகிரி மாவட்டம், எம்.சி.பள்ளி ஸ்ரீஆனந்தவள்ளி அம்பிகா சமேத அகத்தீஸ்வரர் கோவில் நிர்வாகி சரவணன், ஆன்மிக அமைப்பு மூலம் கடந்த ஓராண்டாக மூலிகைக் கஞ்சியை பொதுமக்களுக்கு  வழங்கி வருகிறார்.
கிருஷ்ணகிரியில் மூலிகைக் கஞ்சி வழங்கும் ஆன்மிக அமைப்பினர்
கிருஷ்ணகிரியில் மூலிகைக் கஞ்சி வழங்கும் ஆன்மிக அமைப்பினர்
Updated on
1 min read


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், எம்.சி.பள்ளி ஸ்ரீஆனந்தவள்ளி அம்பிகா சமேத அகத்தீஸ்வரர் கோவில் நிர்வாகி சரவணன், ஆன்மிக அமைப்பு மூலம் கடந்த ஓராண்டாக மூலிகைக் கஞ்சியை பொதுமக்களுக்கு  வழங்கி வருகிறார்.

இதில், மஞ்சள், மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, கருஞ்சீரகம், சித்தரத்தை, வெங்காயம், பூண்டு, பெருங்காயம், புதினா, கொத்தமல்லி, குருணை அரிசி, இஞ்சி, வெந்தயம், ஓமம், சோம்பு, உப்பு ஆகியவற்றை சேர்த்து மூலிகைக் கஞ்சி தயாரிக்கிறார். இவற்றை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை முன்பு, அரசு ஆண்கள் கலைக் கல்லுாரி ஆகிய இடங்களில் தினமும் காலை 7 மணி முதல் மூலிகை கஞ்சியை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றார்.

இதுகுறித்து சரவணன் கூறுகையில், இந்த மூலிகைக் கஞ்சியை குடிப்பதால் பசி அதிகரிக்கும். உடல் சீராக இயங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கரோனா, நீரிழிவு, ரத்த அழுத்தம், குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதில் இருந்து காத்துக் கொள்ளலாம். தினமும் 500 பேருக்கு கடந்த ஓராண்டாக தொடர்ந்து வழங்கி வருகின்றோம். பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட  ஏழை எளியோர் இந்த மூலிகைக் கஞ்சி மூலம் பயன்பெற்றுள்ளனர். மேலும் ஜீவநாடி மூலம் அறிந்து, கரோனா தொற்று எதிர்ப்பு ஊட்டச்சத்து லேகியமும் வழங்கப்படுகிறது. தற்போது கடந்த ஒரு மாதமாக காவேரிப் பட்டணத்திலும், ஐந்து நாள்களாக கிருஷ்ணகிரி நகரில் உள்ள சேலம் சாலை, பெரியார் நகர், டி.பி.சாலை, பழையபேட்டை, வட்டச் சாலை, புதிய வீட்டு வசதி வாரியம், காந்திநகர் ஆகிய இடங்களிலும் மூலிகைக் கஞ்சி வழங்கப்படுகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com