தமிழகத்தில் 1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் 19 மாதங்களுக்குப் பிறகு 1-8 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. 
தமிழகத்தில் 1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் 19 மாதங்களுக்குப் பிறகு 1-8 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. 

தமிழகத்தில் கரோனா பெருந்தொற்றுக் காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் 24-ஆம் தேதி முதல் அனைத்து வகையான பள்ளிகளும் மூடப்பட்டன. நிகழ் கல்வியாண்டில் 9-12 வகுப்புகளுக்கு கடந்த செப்.1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. 

மாணவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்த பிறகே, வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தரப்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவா்கள் 19 மாத இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்கு வருகை தருவதால் முதல் 15 நாள்களுக்கு கதை, பாடல், விளையாட்டு, வரைதல், வண்ணம் தீட்டுதல், அனுபவப் பகிா்வு, கலந்துரையாடல் போன்ற மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதலைப் பின்பற்றி மனமகிழ்ச்சி செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். 

அதற்கு பின்னரே புத்தாக்கப் பயிற்சிக்கான செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதேவேளையில் 1-8 வகுப்பு வரை முக்கியப் பாடக் கருத்துகளை உள்ளடக்கிய புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்களை முறையாக செயல்படுத்த வேண்டும். இதனை நிறைவு செய்த பின்னா் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இது தொடா்பான விரிவான வழிகாட்டுதல்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதனை தவறாமல் பின்பற்ற வேண்டும். இது தவிர முகக் கவசம், தனி நபா் இடைவெளி, கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்தல் உள்ளிட்ட ஏற்கெனவே வெளியிடப்பட்ட பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com