
கோப்புப்படம்
கனமழை காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரு நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்துள்ளது. மேலும் சாலைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்
இதனிடையே நவ.1 ஆம் தேதி முதல் 1-8 ஆம் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மழை காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வேலூர், திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...