‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் திமுகவை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம்’: ஓபிஎஸ்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் திமுகவை கண்டித்து 5 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர் செல்வம்
ஓ.பன்னீர் செல்வம்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் திமுகவை கண்டித்து 5 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 140 அடியை நெருங்கும் முன்னரே தமிழக அரசு கடந்த வாரம் தண்ணீர் திறந்துவிட்டது.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமையில் மதுரையில் உள்ள தனியார் விடுதியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், பாஸ்கரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் பேசியதாவது:

“நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை தேக்கிக் கொள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீதிமன்ற உத்தரவை பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து அதிமுக ஆட்சியில் 3 முறை 142 அடி நீர் தேக்கப்பட்டது.

ஆனால், தற்போது முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்கிக் கொள்ள கேரள அரசு இடையூறு தருகின்றது. இதை திமுக அரசு கண்டும் காணாமல் இருகின்றது.

இந்த விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை செய்த பின் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com