வேளச்சேரி, கோயம்பேடு மேம்பாலங்களை திறந்து வைத்தார் ஸ்டாலின்

சென்னையில் கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
கோயம்பேடு மேம்பாலத்தைத் திறந்து வைக்கும் முதல்வர்
கோயம்பேடு மேம்பாலத்தைத் திறந்து வைக்கும் முதல்வர்

சென்னையில் கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

முதலில் வேளச்சேரியில் தரமணி இணைப்புச் சாலை வேளச்சேரி 100 அடி  பைபாஸ் இணைக்கும் மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர், அதனைத் தொடர்ந்து கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள ஜவாஹா்லால் நேரு 100 அடி சாலையில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

வழக்கமாக, பண்டிகை நாள்களில் தற்காலிக பேருந்து நிலையங்களை அமைத்து அங்கிருந்து பேருந்துகளை இயக்கினாலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தை சுற்றி ஏற்படும் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்த முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

இந்த மேம்பாலத்தைப் பயன்படுத்துவதன் மூலம் போக்குவரத்து நெரிசல் பெருமளவு கட்டுப்படுத்தப்படும் என நெடுஞ்சாலைத் துறையினா் நம்பிக்கை தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com