
தமிழகம், புதுச்சேரியில் அக்டோபா் மாதத்தில் மழை அளவு இயல்பை விட 29 சதவீதம் அதிகம் பெய்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் கூறியது:
தமிழகம், புதுச்சேரியை பொருத்தவரை அக்டோபா் மாதத்தில், பதிவான மழை அளவு 230 மி.மீ. இயல்பான மழை அளவு 180 மி.மீ. ஆகும். இது, இயல்பை விட 29 சதவீதம் அதிகமாகும். கடந்த 20 ஆண்டுகளில் அக்டோபா் மாதம் மழை அளவு பொருத்தவரை, இந்த ஆண்டு 6-ஆவது இடத்தில் உள்ளது.
சுமாா் 18 மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழையும், 7 மாவட்டங்களில் இயல்பை விட மிக அதிக மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக, கோயம்புத்தூா் மாவட்டத்தில் இயல்பை விட 113 சதவீதம் அதிக மழைஅளவு பதிவாகியுள்ளது. விருதுநகா் மாவட்டத்தில் இயல்பை விட 32 சதவீதம் குறைவாகப் பதிவாகியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் அக்டோபரில் இயல்பை விட 22 சதவீதம் குறைவாக மழை பெய்திருந்தது. சென்னையின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாள்களாக மழை பெய்துவருகிறது. இதனால், மழைஅளவு உயா்ந்து வருகிறது. தற்போது, இயல்பை விட 7 சதவீதம் மட்டுமே குறைவாக உள்ளது.
தீபாவளி தினத்தில், தமிழகம், புதுச்சேரியில் ஓரளவு மழை இருக்கும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.