திருவள்ளூரில் தொடர்ந்து பெய்த மழை: தரைப்பாலங்கள் உடைப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் ஏரிகள், குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஆரணி ஆற்று தரைப்பாலம், மெய்யூர் தரைப்பாலம் உள்ளிட்டவை மழை வெள்ளத்தால் ச
திருவள்ளூர் அருகே குப்பம் கண்டிகை கிராமத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த தரைப்பாலம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஒன்றியக்குழு தலைவர் விசயராகவன்.
திருவள்ளூர் அருகே குப்பம் கண்டிகை கிராமத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த தரைப்பாலம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஒன்றியக்குழு தலைவர் விசயராகவன்.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் ஏரிகள், குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஆரணி ஆற்று தரைப்பாலம், மெய்யூர் தரைப்பாலம் உள்ளிட்டவை மழை வெள்ளத்தால் சேதமடைந்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக விடாமல் பெய்து வரும் மழையால் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் சேதமடைந்தன. அதேபோல் நகர் மற்றும் கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீரும் சூழ்ந்துள்ளது. மேலும், இந்த மழையால் சாலையில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளங்களால் போக்குவரத்து வாகனங்கள் சேரை வாரி இறைத்து செல்வதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதில் ஆவடி மாநகராட்சி பகுதியில் தாழ்வாக உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்புக்களுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். அதைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் மூலம் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் அருகே எறையூர் கிராமத்தில் கால்வாய்களை சீரமைக்காத நிலையில் மழை பெய்து வருவதால் கால்வாய் நீருடன் மழைநீர் கலந்து தெருக்களில் செல்வதால் அவதிக்குள்ளாகினர். இதைக் கண்டித்து பொதுமக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதேபோல் பழையனூர், ஜாகிர் மங்கலம் ஆகிய ஊராட்சிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் வாழும் இடங்களில் தொடர் மழையால் வெள்ளம் சூழ்ந்தது. மேலும், திருவள்ளூர் அருகே ஆரணி ஆற்று தற்காலிக தரைப்பாலம், மெய்யூர் தரைப்பாலம், குப்பம் கண்டிகை, லட்சுமி விலாசபுரம் ஊராட்சிகளில் தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. எனவே மழையால் கழிவு நீருடன் மழைநீர் செல்வதால் நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் தடுப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மழை அளவு: இந்த மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரையில் பதிவான மழை அளவு விவரம் மி.மீட்டரில் வருமாறு- சோழவரம் - 125, கும்மிடிப்பூண்டி - 91, பள்ளிப்பட்டு - 89, ஆவடி - 88, செங்குன்றம் - 85, பூந்தமல்லி-86, ஊத்துக்கோட்டை-78, பொன்னேரி-69, பூண்டி, தாமரைப்பாக்கம் தலா-58, திருவள்ளூர்-43, ஆர்.கே. பேட்டை-40, ஜமீன் கொரட்டூர்-38, திருத்தணி-36, திருவலாங்காடு-34 என மொத்தம் 930 மி.மீட்டரும். சராசரியாக-66.42 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. இந்த மாவட்டத்தில் சோழவரம் பகுதியில் அதிக பட்சமாக 125 மி.மீட்டரும், திருவாலங்காடு பகுதியில் 34 மி.மீ குறைந்த அளவிலும் மழை அளவு பதிவாகியுள்ளது.

உபரி நீர் திறப்பு: பூண்டி பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்தேக்கம் 35 அடி உயரமும், 3321 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். இதில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி 33.90 உயரமும், 2786 மில்லியன் கன அடிநீர் இருப்பு உள்ளது. தற்போதைய நிலையில் ஏரி நீர் வரத்து கால்வாய், கிருஷ்ணா கால்வாய் நீர் வரத்து போன்றவைகளால் 2244 கன அடியாகவும் உள்ளது. அதனால் கொசஸ்தலை ஆற்றில் நள்ளிரவு வரையில் 4500 கன அடி உபரி நீர் வெளியேற்றிய நிலையில், திங்கள்கிழமை காலை முதல் தண்ணீர் வெளியேற்றம் விநாடிக்கு 4883 கன அடியாகவும் அதிகரித்துள்ளது.

திருவள்ளூர் அருகே எறையூர் கிராமத்தில் கால்வாய்கள் சீரமைக்காததால் கழிவு நீருடன் மழைநீர் கலந்து தெருக்களில் செல்வதை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம பொதுமக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com