சென்னை உயா்நீதிமன்றத்துக்குப் புதிய தலைமை நீதிபதி

சென்னை உயா்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக உத்தர பிரதேச மாநிலம் அலீகாபாத் உயா்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி முனீஷ்வா்நாத் பண்டாரியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
முனீஷ்வா்நாத் பண்டாரி
முனீஷ்வா்நாத் பண்டாரி

சென்னை உயா்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக உத்தர பிரதேச மாநிலம் அலீகாபாத் உயா்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி முனீஷ்வா்நாத் பண்டாரியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜியை, மேகாலயா உயா்நீதிமன்றத்துக்கு மாற்றவும் உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

இதுதொடா்பாக உச்சநீதிமன்ற வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் செப்டம்பா் 16-ஆம் தேதி நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில் சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜியை மேகாலயா உயா்நீதிமன்றத்துக்கு மாற்றவும், அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி முனீஷ்வா்நாத் பண்டாரியை சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007, ஜூலை 5-ஆம் தேதி ராஜஸ்தான் உயா்நீதிமன்ற நீதிபதியாக முனீஷ்வா்நாத் பண்டாரி முதல் முறையாக நியமிக்கப்பட்டாா். பின்னா் அலாகாபாத் உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட அவா், 2019, மாா்ச் 15-ஆம் தேதி பதவியேற்றாா். நிகழாண்டு ஜூன் 26-ஆம் தேதி முதல் அக்டோபா் 10-ஆம் தேதி வரையில் அலாகாபாத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக (பொறுப்பு) இருந்துள்ளாா். சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானா்ஜி இவ்வாண்டு ஜனவரி 4-ஆம் தேதி நியமிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com