மேய்ச்சலுக்கு சென்று கொள்ளிடம் ஆற்றின் திட்டில் சிக்கிக்கொண்ட 24 பசுமாடுகள் மீட்பு

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் திட்டில் மேய்ச்சலுக்கு சென்று சிக்கிக்கொண்ட 24 பசுமாடுகளை டி.எஸ்.பி லா மெக் தலைமையில் போலீசார் இன்று வெள்ளிக்கிழமை காலை படகுகள் மூலம் மீட்டனர். 
ஆற்றின் நடுப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடுகளை அதன் உரிமையாளர்கள் உதவியுடன் படகுகளில் ஏற்றி கரை கொண்டு வந்தனர். 
ஆற்றின் நடுப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடுகளை அதன் உரிமையாளர்கள் உதவியுடன் படகுகளில் ஏற்றி கரை கொண்டு வந்தனர். 

சீர்காழி: சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் திட்டில் மேய்ச்சலுக்கு சென்று சிக்கிக்கொண்ட 24 பசுமாடுகளை டி.எஸ்.பி லா மெக் தலைமையில் போலீசார் இன்று வெள்ளிக்கிழமை காலை படகுகள் மூலம் மீட்டனர். 

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த இரு தினங்களாக சீர்காழி பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ள உபரிநீராலும், சுற்றுப்புறபகுதியில் பெய்து வரும் மழை தண்ணீராலும் ஆற்றில் அதிகளவு தண்ணீர் ஆர்பரித்து செல்கிறது. 

மேய்ச்சலுக்காக ஆற்றின் நடுவில் உள்ள திட்டு பகுதிக்கு சென்று மேய்ந்துவிட்டு அங்கேயே தங்கிய பசு மாடுகளை படகுகள் மூலம் மீட்ட சீர்காழி தீயணைப்புத்துறையினர் மற்றும் கொள்ளிடம் போலீசார்.

இதனிடையே  கொள்ளிடம் சந்தைபடுகை பகுதியில் வளர்க்கப்படும் பசுமாடுகள் மேய்ச்சலுக்காக ஆற்றின் நடுவில் உள்ள திட்டு பகுதிக்கு சென்று மேய்ந்துவிட்டு அங்கேயே உறங்கி பின்னர் தானாக கால்நடை வளர்ப்பவர் வீட்டிற்கு வந்துசேரும். 

அவ்வாறு மேய்ச்சலுக்கு சென்ற சுமார் 24 பசுமாடுகள் ஆற்றின் திட்டில் மேய்ந்துவிட்டு அங்கேயே உள்ளது. தற்போது கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீர் வேகமாக செல்வதால் மாடுகள் கரை திரும்பமுடியாமல் மண்திட்டிலேயே உள்ளன.

இதனையறிந்த கால்நடை வளர்போர் சிலர் தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு இல்லாததால் கால்நடைகள் தானாக வந்துவிடும் என உள்ளனர். ஆனால் சிலர் கால்நடைகள் தண்ணீரில் அடித்து சென்றுவிடும் என அச்சப்படுகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்புத்துறையினர் மற்றும் கொள்ளிடம் போலீசார் கொள்ளிடம் ஆற்றின் பாலத்திலிருந்து கால்நடைகளை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் இரவு நேரம் ஆகிவிட்டதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

ஆற்றின் நடுப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடுகளை படகுகள் மூலம் மீட்டு வந்து மாட்டின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்த சீர்காழி தீயணைப்புத்துறையினர் மற்றும் கொள்ளிடம் போலீசார்.

மீண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் அறிவுறுத்தலின்படி இன்று வெள்ளிக்கிழமை காலை 24 மாடுகளையும், சீர்காழி டிஎஸ்பி 
லாமெக்  தலைமையில், கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் அமுதாராணி மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் படகுகளில் கொள்ளிடம் ஆற்றுக்கு சென்றனர். அங்கு ஆற்றின் நடுப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடுகளை அதன் உரிமையாளர்கள் உதவியுடன் படகுகளில் ஏற்றி கரை கொண்டு வந்தனர். 

போலீசாரின் இந்த செயலுக்கு மாட்டின்  உரிமையாளர்கள் பாராட்டு தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com