மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா: அரசு சார்பில் மரியாதை 

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழாவை முன்னிட்டு அரசு சார்பில் அவரது சிலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழாவை முன்னிட்டு அரசு சார்பில் அவரது சிலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழாவை முன்னிட்டு அரசு சார்பில் அவரது சிலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

தஞ்சாவூா்: தஞ்சாவூர் பெரியகோயிலில் சனிக்கிழமை நடைபெற்று வரும் 1036-ஆவது சதய விழாவில் மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

பாா் போற்றும் புகழுடைய தஞ்சாவூா் பெரியகோயிலைக் கட்டித் தமிழகத்துக்குப் பெருமை சோ்த்த மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள், அவா் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் பெரியகோயிலில் நடைபெறும் சதய விழாவில் கோயிலுக்கு வெளியே உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கிறார் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

இதன்படி, மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036-ஆவது சதய விழா இன்று சனிக்கிழமை (நவ.13) கொண்டாடப்படுகிறது. வழக்கமாக இருநாள்கள் நடைபெறும் இவ்விழா, கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டைப் போல நிகழாண்டும் ஒருநாள் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இதையொட்டி பெரிய கோயிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி கடந்த திங்கள்கிழமை காலை நடைபெற்றது. 

கோயில் வளாகத்தில் நடைபெற்ற திருமுறை திருவீதி உலா.

இதன்படி, மாமன்னன் ராஜராஜசோழனின் 1036-ஆவது சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று சனிக்கிழமை காலை மங்கள இசையுடன் தொடங்கிய இவ்விழாவில் கோயில் உள்பிரகாரத்தில் திருமுறை திருவீதி உலா நடைபெற்றது.

மாமன்னன் ராஜராஜ சோழன் சிலை

பின்னர் கோயிலுக்கு வெளியே உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, சதய விழாக்குழு தலைவர் து. செல்வம் உள்பட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். 

இதைத்தொடர்ந்து தருமபுர ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சார்பில் பெருவுடையார், பெரியநாயகிக்கு 36 வகை பொருள்களால் பேரபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் 1 மணிக்கு பெருந் தீப வழிபாடு, மாலை 6 மணிக்கு தேவார இன்னிசை நிகழ்ச்சி, 6.30 மணிக்கு கோயில் உள் பிரகாரத்துக்குள் சுவாமி புறப்பாடு ஆகியவை நடைபெறவுள்ளன.

தஞ்சாவூா் பெரியகோயிலில் சதய விழாவையொட்டி, மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com