மதுரையில் 2-ம் நாளாக கல்லூரி மாணவர்கள் போராட்டம்

பருவத் தேர்வை இணைய வழியில் நடத்தக் கோரி மதுரையில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் 2-ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையில் 2-ம் நாளாக கல்லூரி மாணவர்கள் போராட்டம்
மதுரையில் 2-ம் நாளாக கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மதுரை: பருவத் தேர்வை இணைய வழியில் நடத்தக் கோரி மதுரையில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் 2-ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரோனா பொதுமுடக்கத்துக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடியாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பருவத் தேர்வுகள் நேரடித் தேர்வாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்புப் பருவத்தில் வகுப்புகள் இணைய வழியிலேயே நடத்தப்பட்டுள்ளதால் தேர்வுகளையும் இணைய வழியில் நடத்த வேண்டும் என கல்லூரி மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே நேரடித் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை மதுரை சௌராஷ்டிரா கல்லூரி, மன்னர் கல்லூரி, மதுரை கல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் மாணவர்கள் தங்களது கல்லூரி முன்பாக சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். 

பின்னர் அவர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இங்கு ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமர்ந்து இணையவழி தேர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் மாணவர்களின் பிரதிநிதிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்க அழைத்துச் செல்லப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com