
மதுரை தனியார் பள்ளியில் மாடியிலிருந்து குதித்து +2 மாணவி தற்கொலை முயற்சி
மதுரை: மதுரையில் தனியார் பள்ளியில் இரண்டாவது மாடியில் இருந்து குதித்த பிளஸ் 2 மாணவி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மதுரையில் பிரபலமான தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவி ஒருவர், வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்துள்ளார்.
பள்ளியில் வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், அவர் திடீரென்று இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் துன்புறுத்துவதாக கூறி மாணவர் ஒருவர் இரண்டாவது மாடியிலிருந்து தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...