வைகையில் வெள்ளப்பெருக்கு: மதுரையில் தரைப்பாலம் மூடப்பட்டது

மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பால் தரைப்பாலம் மூட்டப்பட்டு போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பால் தரைப்பாலம் மூட்டப்பட்டது.
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பால் தரைப்பாலம் மூட்டப்பட்டது.

மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பால் தரைப்பாலம் மூட்டப்பட்டு போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டம், வைகை அணை முழு கொள்ளவை எட்டியதால் அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடியை தாண்டி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வைகையாறு செல்லக்கூடிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் மற்றும் வைகை அணையை ஒட்டியள்ள நீர்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, வெள்ளிமலை, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாகவும் வெளியேறும் உபரிநீரும் சேர்ந்து வைகை ஆற்றின் நீரின் வரத்து 10 ஆயிரம் கன அடி அளவிற்கு வரத்தொடங்கியுள்ளது. 

இதன் காரணமாக மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் யானைக்கல் தரைப்பாலம் முழுமையாக நீரில் மூழ்கியது. 

இதனையடுத்து தரைப்பாலத்தில் பொதுமக்கள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு பாலம் மூடப்பட்டதோடு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..

வைகை ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம், செல்பி எடுக்க வேண்டாம் எனவும் காவல்துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

வைகை ஆற்றில் அதிகளவிற்கு நீர் வெளியேற்றக்கூடிய நிலையில் வைகை நீரை நம்பியுள்ள 5 மாவட்ட விவசாயிகளும் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே கடந்த வாரத்தில் வைகை ஆற்றில் குளிக்க சென்ற மூன்றுபேர் உயிரிழந்த நிலையில் கரையோரங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com