காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு

புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், வில்லியனூர் ஆற்றுப்பாலத்தில் மழை வெள்ளத்தால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

News image
பாலத்தினை ஆய்வு செய்த உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள்.
Updated On :19 நவம்பர் 2021, 7:05 am

DIN

புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், வில்லியனூர் ஆற்றுப்பாலத்தில் மழை வெள்ளத்தால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பெய்த தொடர் கனமழை காரணமாக, சங்கராபரணி ஆற்றில் வெள்ள நீர் வழிந்தோடுகிறது. வீடூர் அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டு, ஆற்றில் வெள்ள நீர் அதிகரித்துள்ளதால், சங்கராபரணி ஆறு நிரம்பி வழிந்த நிலையில் தண்ணீர் செல்கிறது. 

Story image

வில்லியனூர் ஆரியப்பாளையம் ஆற்றுப் பாலத்தை தொட்டு வழியும் நிலையில் வெள்ளம் கரைபுரண்டோடும் வெள்ளம்.

இதனால் இதன் குறுக்கே அமைந்துள்ள புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனூர் ஆரியப்பாளையம் ஆற்றுப் பாலத்தை தொட்டு வழியும் நிலையில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாலத்தின் வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

வில்லியனூர்-திருக்காஞ்சி பாலம் வழியாக போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.

உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் நேரில் பார்வையிட்டு, போக்குவரத்தை துண்டித்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.