குறிப்பிட்ட நியாயவிலைக் கடைகளில் காய்கறி, தக்காளி விற்பனை: தமிழக அரசு

குறிப்பிட்ட நியாயவிலைக் கடைகளிலும் காய்கறி மற்றும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட நியாயவிலைக் கடைகளில் காய்கறி, தக்காளி விற்பனை: தமிழக அரசு
குறிப்பிட்ட நியாயவிலைக் கடைகளில் காய்கறி, தக்காளி விற்பனை: தமிழக அரசு


சென்னை: தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட நியாயவிலைக் கடைகளிலும் காய்கறி மற்றும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

மழைக்காலத்தை முன்னிட்டு வெளிச்சந்தையில் காய்கறிகள் விலை உயர்வினை கட்டுப்படுத்த குறைந்த விலையில் (குறிப்பாக தக்காளி) விற்பனை செய்வது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தமிழகத்தில் பருவமழை காரணமாக காய்கறிகள் குறிப்பாக தக்காளியின் விலை உயர்வை கட்டுப்படுத்தி மக்களுக்கு மலிவு விலையில் தரமான காய்கறிகள் மற்றும் தக்காளி கிடைக்க தமிழக அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

கூட்டுறவுத்துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.85/- ரூ.100/- வரை குறைவான விலையில் தரமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முதற்கட்டமாக நாளொன்றுக்கு 15 மில்லியன் டன் தக்காளி மற்றும் இதர காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று மதியம் வரை தோராயமாக 8 மில்லியன் டன் தக்காளி மற்றும் இதர காய்கறிகள் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வெளிச்சந்தை விலையை விட குறைந்த விலையில் பின்வரும் விவரப்படி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள நகர்ப்புறம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள குறிபிட்ட நியாயவிலைக்கடைகளிலும் காய்கறி மற்றும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் மக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அரசின் இந்நடவடிக்கையால் நேற்று வரை வெளிச்சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.150/- என்று விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ ரூ.90-100 வரை எனவும் மேலும் இதர காய்கறிகள் விலையும் வெளிச்சந்தையில் கணிசமாக குறைந்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com