விலை உச்சம்: சட்னி ஆக வேண்டிய தக்காளி டிரெண்டிங் ஆனது

பெட்ரோல், டீசல், விலைகளை எல்லாம் தாண்டி தக்காளி விலை உச்சம் தொட்டிருப்பதால், சுட்டுரையில் இன்று தக்காளி டிரெண்டிங் ஆகியுள்ளது.
விலை உச்சம்: சட்னி ஆக வேண்டிய தக்காளி டிரெண்டிங் ஆனது
விலை உச்சம்: சட்னி ஆக வேண்டிய தக்காளி டிரெண்டிங் ஆனது

பொதுவாக வெங்காயத்தை நறுக்கும்போதுதான் கண்களில் தண்ணீர் வரும். ஆனால், இன்றைய விலை நிலவரமோ, தக்காளியை நினைத்தாலே கண்களில் கண்ணீர் கொட்டுகிறது. பெட்ரோல், டீசல், விலைகளை எல்லாம் தாண்டி தக்காளி விலை உச்சம் தொட்டிருப்பதால், சுட்டுரையில் இன்று தக்காளி டிரெண்டிங் ஆகியுள்ளது.

இதையும் படிக்கலாமே.. வாகனங்களின் பிஎச் பதிவு: மாநிலங்களுக்கு மற்றொரு நிதி இழப்பு ஆபத்து?

இந்திய அளவில், சுட்டுரைப் பக்கத்தில் தக்காள் விலை என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.

தமிழகத்தில் தக்காளி விலை தொடா்ந்து உச்சத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகம் முழுவதும் பரவலாக பெய்த பலத்த மழை காரணமாக சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்து, அதன் விலை கடுமையாக அதிகரித்தது. விளைநிலங்களில் மழைநீா் தேங்கி அறுவடை செய்ய முடியாமல் தக்காளி அழுகியதும், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததுமே அதன் விலை உயா்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனா்.

பொதுவாக, ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையாகும் தக்காளி, மழைக் காலம் தொடங்கியதும் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுவது வழக்கம்தான். ஆனால், இந்த முறை, தொடர் கனமழை காரணமாக, தென்னிந்திய மாநிலங்களில் ரூ.140 வரை ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அக்டோபர் மாதத்தில் தொடங்கிய விலை உயர்வு, நவம்பர் மாத இறுதி வரை நீடிக்கிறது. ஒரு பக்கம் கனமழையைக் காரணம் காட்டினாலும், மறுபக்கம், விலைச் சரிவு காரணமாக, ஏராளமான விவசாயிகள் தக்காளி அறுவடையை தவிர்த்துவிட்டதாகவும், மிகக் குறைந்த தக்காளியே அறுவடை செய்யப்பட்டிருப்பதும் விலையேற்றத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com