25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,400-க்கும் கீழ் குறைந்தது

தமிழகத்தில் இன்று புதிதாக 1,390 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:19 am

DIN

தமிழகத்தில் இன்று புதிதாக 1,390 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
மாநிலத்தில் இதுவரை 4.80 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 26 லட்சத்து 74,233 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 173 பேருக்கும், கோவையில் 145 பேருக்கும், செங்கல்பட்டில் 107 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே, மேலும் 1,487 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். 

இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 21,986-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 16,513 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 27 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,734-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.