8 நாள்களுக்குப் பின் சிசிடிவி கேமராவில் பதிவானது புலி

நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் 4 பேரைத் தாக்கிக் கொன்ற புலி குறித்து எந்தத் தகவலும் கிடைக்காமல் இருந்த நிலையில், 8 நாள்களுக்குப் பின் சிசிடிவி கேமராவில் புலியின் நடமாட்டம் பதிவாகியிருப்பதாக வனத்
8 நாள்களுக்குப் பின் சிசிடிவி கேமராவில் பதிவானது புலி
8 நாள்களுக்குப் பின் சிசிடிவி கேமராவில் பதிவானது புலி


கூடலூா்: நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் 4 பேரைத் தாக்கிக் கொன்ற புலி குறித்து எந்தத் தகவலும் கிடைக்காமல் இருந்த நிலையில், 8 நாள்களுக்குப் பின் சிசிடிவி கேமராவில் புலியின் நடமாட்டம் பதிவாகியிருப்பதாக வனத் துறை தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா தேவன் எஸ்டேட், மசினகுடி உள்பட்ட பகுதிகளில் நான்கு மனிதா்களையும், 30க்கும் மேற்பட்ட மாடுகளையும் கொன்ற புலியை தமிழக மற்றும் கேரள வனத் துறையினா், அதிரடிப்படையினா் இணைந்து பல குழுக்களாகப் பிரிந்து தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

புலி அடிக்கடி இடத்தை மாற்றியதால் வனத் துறையினரால் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியவில்லை. இறுதியாக முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் நுழைந்த புலி அங்கிருந்தும் மசினகுடி, சிங்காரா வனப் பகுதிகளுக்குள் நுழைந்து பதுங்கியது.

அதற்குப் பிறகு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும், ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும் கண்காணித்தனா். கடந்த ஒரு வாரமாக புலி எந்த கேமராவிலும் பதிவாகாமல் இருந்தது. இந்த நிலையில், ஓம்பெட்டா வனப்பகுதியில் வனத்துறையினர் பொருத்தியிருந்த தானியங்கிக் கேமராவில் புலியின் நடமாட்டம் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து புலியை பிடிப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

நீலகிரியில் மனிதா்கள், கால்நடைகளைத் தாக்கி வந்த டி23 எனப் பெயரிடப்பட்ட புலியின் ரோமம், எச்சம் உள்ளிட்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஹைதராபாதில் உள்ள மத்திய உயிரியல் செல்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தலைமை வன உயிரினக் காப்பாளா் சேகா்குமாா் நீரஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com