
புதிய வழித்தட பேருந்துகளை திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் எம்எல்ஏவுமான நிவேதா முருகன், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
சீர்காழி: சீர்காழியில் புதிய வழித்தடத்தில் இரண்டு நகரப் பேருந்துகள் இயக்கம் தொடங்கப்பட்டது.
சீர்காழியில் இருந்து புத்தூர் மாதானம் வழியாக பழையார்பகுதிக்கும், அதேபோல் சீர்காழியிலிருந்து, காத்திருப்பு, செம்பதனிருப்பு, வழியாக திருவிடைக்கழி ஆகிய பகுதிக்கும் முன்பு நகர அரசு பேருந்து இயங்கிக்கொண்டிருந்தது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டதால் மக்கள், பேருந்து பயணிகள் அவதி அடைந்தனர்.
இதனையடுத்து நிறுத்தப்பட்ட பேருந்து மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, இரண்டு புதிய வழித்தட நகரப் பேருந்துகள் மீண்டும் இயக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சீர்காழி கோட்டாட்சியர் நாராயணன் தலைமை வகித்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் விஸ்வநாதன், அரசுப் போக்குவரத்துக் கழக கோட்ட வணிக மேலாளர் ராஜா, சீர்காழி கிளை மேலாளர் கபிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையும் படிக்க | சீர்காழி அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஒருவர் காயம்
புதிய வழித்தட பேருந்துகளை திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் எம்எல்ஏவுமான நிவேதா முருகன், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இவ்விழாவில் சீர்காழி நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், சசிகுமார், மலர்விழி திருமாவளவன், செல்ல சேது ரவிக்குமார், கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், தொமுச தலைவர் சின்னதுரை, செயலாளர் அன்பழகன், பொருளாளர் குழந்தைவேலு மற்றும் நிர்வாகிகள் திருவரசமூர்த்தி மோகன், அபூபக்கர் சித்திக், முத்துக்குமார், ராஜசேகர், பிரகாஷ் திமுக நிர்வாகிகள் பாஸ்கரன், தன்ராஜ், பந்தல். முத்து, குகன், பெரியசாமி, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.