சீர்காழி அருகே ராதாநல்லூர் கிராமத்தில் தொகுப்பு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்தார். பழுதடைந்த வீடுகளை சீரமைத்து தர அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே ராதாநல்லூர் கிராமத்தில் 20 க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டு கட்டப்பட இந்த வீடுகள் தற்போது வரை 30 ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பும் இன்றி சிதிலமடைந்து உள்ளது.
இந்நிலையில், இந்த கிராமத்தில் கூலி விவசாயி அறிவழகன், மனைவி யசோதா உடன் வசித்து வருகிறார். செவ்வாய்கிழமை இரவு வழக்கம்போல வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது தொகுப்பு வீட்டின் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது. இதில் காயம் அடைந்த அறிவழகன், யசோதா வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார். அடுத்தடுத்து பெயர்ந்து விழுந்த காரையால் வீட்டில் இருந்த டி.வி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள்கள் சேதமடைந்தது.

சீர்காழி அருகே ராதாநல்லூர் கிராமத்தில் தொகுப்பு வீட்டின் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்ததில் காயம் அடைந்த அறிவழகன்,
மேலும் இங்குள்ள தொகுப்பு வீடுகள் முழுவதும் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் தூங்கிக்கொண்டு இருக்கும்போது மின்விசிறி பெயர்ந்து விழுந்து பெண் ஒருவர் தலையில் அடிபட்டு காயமான சம்பவமும் இந்த கிராமத்தில் நடைபெற்றது. இதில் வாழும் ஏழை மக்கள் உயிர் பயத்துடன் அருகில் குடிசை அமைத்தும்,வீட்டின் மீது தார்பாய்கள் கட்டியும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எப்பொழுது வேண்டுமானாலும் தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
எனவே தொகுப்பு வீடுகளை மறுசீரமைப்பு செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


