வாழப்பாடி அருகே மூடுபனி: வாகன ஓட்டிகள் அவதி

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 7 மணிவரை மூடுபனி உறைந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
வாழப்பாடி அருகே சேசன்சாவடியில் உறைந்து காணப்பட்ட மூடுபனி.
வாழப்பாடி அருகே சேசன்சாவடியில் உறைந்து காணப்பட்ட மூடுபனி.


வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 7 மணிவரை மூடுபனி உறைந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

வாழப்பாடி பகுதியில் புதன்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணி வரை தொடர்ந்து 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதுமட்டுமின்றி, பல இடங்களில் நள்ளிரவு வரை மழைத் தூறல் தொடர்ந்ததால் கடும் குளிர் வீசியது.

சேலம் -உளுந்தூர்பேட்டை  தேசிய நெடுஞ்சாலையி,ல் முகப்பு விளக்குகளை எரியச் செய்து ஊர்ந்து சென்ற வாகனங்கள்.

இந்நிலையில், வாழப்பாடி அருகே சேஷன்சாவடி ராகவேந்திராபுரம், செல்லியம்மன் நகர், முத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை 7 மணி வரை மூடுபனி உறைந்து காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். அனைத்து வாகனங்களிலும் முகப்பு விளக்குகளை எரிய செய்து சாலையை கவனமாக கடந்து சென்றனர்.

மலைப் பிரதேசங்களில் காணப்படுவதைப் போல, வாழப்பாடி பகுதியில் மூடுபனி உறைந்துறைந்து காணப் பட்ட காட்சி இப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மூடு பனியை, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com