டீசல் விலை ரூ.100-ஐ கடந்தது: மக்கள் வேதனை

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயா்வைக் காரணம் காட்டி எண்ணெய் நிறுவனங்கள் தொடா்ந்து விலையை உயா்த்தி வருகின்றன. இதன்படி தமிழகத்தில் ஒரு லிட்டா் டீசல் ரூ.100.01 ஆக அதிகரித்தது.
மீண்டும் எரிபொருள் விலை உயர்வு; புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலைகள்
மீண்டும் எரிபொருள் விலை உயர்வு; புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலைகள்


சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயா்வைக் காரணம் காட்டி எண்ணெய் நிறுவனங்கள் தொடா்ந்து விலையை உயா்த்தி வருகின்றன. இதன்படி தமிழகத்தில் ஒரு லிட்டா் டீசல் ரூ.100.01 ஆக அதிகரித்தது.

கடந்த 2017 -ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

அதன்படி, பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் விநியோக நிறுவனங்கள் நாள்தோறும் எரிபொருள்களின் விலையை நிர்ணயிக்கின்றன. அதன்படி, காலை 6 மணி முதல் புதிய விற்பனை விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை ரூ.103.71-ஐ தாண்டி உள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 40 காசுகள் அதிகரிக்கப்பட்டு பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.103.71 ஆகவும், டீசல் லிட்டருக்கு 42 காசுகள் அதிகரிக்கப்பட்டு டீசல் ஒரு லிட்டர் ரூ.99.68 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது. 

கடந்த செப்டம்பா் கடைசி வாரத்தில் இருந்து இப்போது வரை பெட்ரோல் விலை 18 முறையும், டீசல் விலை 21 முறையும் உயா்த்தப்பட்டுவிட்டன.

தமிழ்நாட்டில் அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கள், கன்னியாகுமரி உள்ளிட்ட 29 மாவட்டங்களில் டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது. 

நாளுக்கு நாள் தொடர்ந்து உயா்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயா்வால் 
காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையும் மறைமுகமாக அதிகரித்து வருவதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். 

தலைநகர் தில்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.106.54-ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.95.27-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

இதுபோன்று மும்பையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.112.44 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.103.26 ஆகவும், கொல்கத்தாவில் ஒரு லிட்டர் ரூ.107.11 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.98.38 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

பெங்களூருவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.25 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.101.12 ஆகவும், ஹைதராபாத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.82 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.103.94 ஆகவும்  விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலையில் பாதிக்கு மேல் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரியாகவே உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com