
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
வித்தியாசமான அரசியலை திமுக சட்டப்பேரவையில் தான் காண்பிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :
1958 முதல் தமிழகத்தில் ஒவ்வொரு முறை ஆட்சி மாறும் போதும் முதல்வரின் பெயரில் ஒருவர் செய்ததை மற்றொருவர் எடுப்பதும், மாற்றுவதும் நடந்து வருகிறது. அதன்படி, பல்கலைக்கழகங்கள் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும். இதையே பாஜக கட்சி சட்டப்பேரவைத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று பேரவையில் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் வித்தியாசமான அரசியலை காட்டப்போகிறோம் என திமுகவினர் சொன்னார்கள்.
அவர்கள், வித்தியாசமான அரசியலை சட்டப்பேரவையில் தான் காண்பிக்க வேண்டும் என்றார் அவர்.