சமையல் எரிவாயு உருளை விலை ரூ.900.50 ஆக உயர்வு: மக்கள் அதிர்ச்சி

வீட்டு உபயோக மானிய சமையல் எரிவாயு உருளையின் விலை மேலும் ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வானது புதன்கிழமை காலை அமலுக்கு வந்தது. 
சமையல் எரிவாயு உருளை விலை ரூ.900.50 ஆக உயர்வு: மக்கள் அதிர்ச்சி


வீட்டு உபயோக மானிய சமையல் எரிவாயு உருளையின் விலை மேலும் ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வானது புதன்கிழமை காலை அமலுக்கு வந்தது. 

சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு  ஏற்ப ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதி மற்றும் 15 ஆம் தேதி சமையல் எரிவாயு உருளையின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. 

இதன்படி, கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.50 உயா்த்தப்பட்டு ரூ.610-இல் இருந்து ரூ.660 ஆக நிா்ணயிக்கப்பட்டது. பின்னா், பிப்ரவரி மாதத்தில் இருந்து எரிவாயு உருளையின் விலை தொடா்ந்து உயா்த்தப்பட்டு வருகிறது.

பிப்.4-ஆம் தேதி ரூ.25, பிப்.15-ஆம் தேதி ரூ.50, பிப்.25-ஆம் தேதி மீண்டும் ரூ.25 உயா்த்தப்பட்டது. தொடா்ந்து, மாா்ச் 1-ஆம் தேதி ரூ.25 உயா்த்தப்பட்டது. இதன்படி, ஒரு மாதத்துக்குள் சிலிண்டா் விலை ரூ.125 அதிகரிக்கப்பட்டது. பின்னா், ஏப்ரல் 1-ஆம் தேதி விலை ரூ.10 குறைக்கப்பட்டது. அதன் பின்னரும் எரிவாயு உருளையின் விலை தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், மீண்டும் ரூ.25 உயா்த்தப்பட்டது. 

கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.825 இருந்த நிலையில் ஜூலை 1 ஆம் தேதி ரூ.25-ம், ஆகஸ்ட் மாதம் ரூ.25 உயத்தப்பட்டதால் ரூ.875.50-க்கு விற்பனையானது. வணிக ரீதியான எரிவாயு உருளை விலை ரூ.84.40 அதிகரித்து ரூ.1,687.50 ஆக விற்பனை செய்யப்பட்டது. 

ஏற்கனவே கரோனா பெருந்தொற்று பாதிப்பு மற்றும் வேலையில்லாமல் மக்கள் தவித்து வரும் நிலையில் தொடர்ந்து எரிப்பொருள்கள் விலை அதிகரித்து வருவது நடுத்தர வர்கத்தின, ஏழைகள் கடும் சிரமமான நிலைக்கு தள்ளியுள்ளது. விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். 

இந்நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் வீட்டு உபயோக மானிய சமையல் எரிவாயு உருளையின் விலை மேலும் ரூ.25 உயர்த்தப்பட்டு ரூ.900.50 ஆகவும், வணிக ரீதியான எரிவாயு உருளை விலை ரூ.75 அதிகரித்து ரூ.1,831 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம், கடந்த ஓர் ஆண்டுகளில் எரிவாயு உருளையின் விலை ரூ.285 அதிகரித்துள்ளது. 

இந்த விலை உயா்வு, சாமானிய மக்களிடம் குறிப்பாக இல்லத்தரசிகளை கவலை அடையச் செய்துள்ளது. இந்த விலை உயா்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com