
தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் பெயர் மாற்றம்: முதல்வர் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் பெயர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என மாற்றம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வீட்டு வசதி வாரிய கொள்கை விளக்கக் குறிப்பு தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதுபற்றி தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காகக் கொண்டு வரப்பட்டது. இந்த வாரியத்தின் மூலம் குடிசையில் வாழ்ந்து வந்த மக்களுக்காக பல்லாயிக்கணக்கான குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
இனி, தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் பெயர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்தார்.