புதுச்சேரியில் 9,10, 11,12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

புதுச்சேரியில் கரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு நிகழ் கல்வியாண்டுக்கான பள்ளிகள் புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.முதல்முறையாக 9 10 11 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 
புதுச்சேரியில் 9,10, 11,12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு


புதுச்சேரி: புதுச்சேரியில் கரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு நிகழ் கல்வியாண்டுக்கான பள்ளிகள் புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக 9 10 11 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 

சுழற்சி முறையில் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளிலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் சுழற்சிமுறையில் புதன்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக்குள் நுழையும் முன் முகக் கவசம் அணிந்து இருக்க வேண்டும், உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பின்பே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதற்காக கடந்த சில நாள்களாக புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளிலும் கிருமிநாசினி கொண்டு தூய்மை படுத்தப்பட்டுள்ளது. புதன்கிழமை 9, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆர்வத்தோடு பள்ளிக்கு வருகை தந்தனர்.

ஒவ்வொரு வகுப்பிலும் 50 சதவீதம் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டுள்ளனர்.

காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே பள்ளிகள் இயங்கும் என்றும், புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com