தமிழகத்தில் புதிதாக 1,682 பேருக்கு கரோனா; 21 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,682 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 21 பேர் உயிரிழந்தனர். 
தமிழகத்தில் புதிதாக 1,682 பேருக்கு கரோனா; 21 பேர் பலி
தமிழகத்தில் புதிதாக 1,682 பேருக்கு கரோனா; 21 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,682 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 21 பேர் உயிரிழந்தனர். 

தமிழகத்தில் நேற்று 1,647 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை (செப்.21) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிதாக 1,682 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 26,50,370-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஒரு நாளில் மட்டும் பலி எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,400-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து 1,627 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25,97,943-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 17,027 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாளில் மட்டும் 1,51,260 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு....

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 235 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

திருப்பூரில் மீண்டும் கரோனா அதிகரித்துள்ளது. இன்று 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதிகபட்ச பாதிப்புகள்...

கோவை - 235
சென்னை - 194
ஈரோடு - 130
செங்கல்பட்டு - 110
திருப்பூர் - 101
சேலம் - 98
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com