திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தமிழகத்தில் இன்று 1,733 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று 1,733 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 2:42 pm

DIN

தமிழகத்தில் இன்று 1,733 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
மாநிலத்தில் இதுவரை 4.60 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 26,53,848 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக கோவையில் 210 பேரும், சென்னையில் 205 பேரும், செங்கல்பட்டில் 122 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதற்கிடையே நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டு மேலும் 1,631 போ் வீடு திரும்பியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் கரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 26.01 லட்சத்தைக் கடந்துள்ளது. 

தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 17,196-ஆக உள்ளது. மற்றொரு புறம் கரோனாவுக்குள்ளாகி மேலும் 27 போ் உயிரிழந்ததால், இதுவரை நோய்த் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 35,454-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.