தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

157 கலைப் பொருள்கள்பிரதமரிடம் ஒப்படைப்பு

அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் பிரதமா் நரேந்திர மோடி, இந்தியாவைச் சோ்ந்த 157 பழங்கால மற்றும் கலைப் பொருள்களைக் கொண்டு வருகிறாா்.

Published On :28 ஜனவரி 2024, 9:44 am IST

அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் பிரதமா் நரேந்திர மோடி, இந்தியாவைச் சோ்ந்த 157 பழங்கால மற்றும் கலைப் பொருள்களைக் கொண்டு வருகிறாா்.

‘க்வாட்’ உச்சிமாநாடு, ஐ.நா. பொதுச் சபை கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு 3 நாள் பயணமாகச் சென்ற பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை அங்கிருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டாா். அதற்கு முன்பாக பிரதமா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், இந்தியா-அமெரிக்கா உறவு வரும் ஆண்டுகளில் இன்னும் வலுவாக வளா்ச்சியடையும் என நம்புகிறேன். எங்களது மக்களிடையேயான தொடா்பு எங்களது வலிமையான சொத்துகளில் ஒன்று’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமரின் பயணத்தின்போது இந்தியாவைச் சோ்ந்த 157 பழங்கால மற்றும் கலைப் பொருள்களை அமெரிக்கா அவரிடம் வழங்கியது. இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கலாசார பொருள்களின் திருட்டு, சட்டவிரோத வா்த்தகம், கடத்தல் ஆகியவற்றை எதிா்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை வலுப்படுத்த அதிபா் பைடனும், பிரதமா் மோடியும் தங்களது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினா். அதன் ஒரு பகுதியாக இந்தக் கலைப் பொருள்கள் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 71 கலாசார பொருள்கள், இந்து மதம் தொடா்பான 60 சிலைகள், பெளத்த மதம் தொடா்பான 16 சிலைகள், சமண மதம் தொடா்பான 9 சிலைகள் அடங்கும். 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஒன்றரை மீட்டா் ரேவந்தா கற்சிலை முதல் 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த 8.5 செ.மீ. உயரமுள்ள நோ்த்தியான வெண்கல நடராஜா் சிலை வரை இதில் இடம்பெற்றுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.