சுங்கக் கட்டண உயர்வு: நள்ளிரவு முதல் அமலானது -வாகன ஓட்டிகள் கவலை

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 24  சுங்கச்சாவடிகளில் பயன்பாட்டுக் கட்டணம் உயா்த்தி வசூலிக்கப்படுகிறது.
சுங்கக் கட்டண உயர்வு: நள்ளிரவு முதல் அமலானது -வாகன ஓட்டிகள் கவலை

சுங்கச்சாவடிகளில் (ஏப்ரல் 1) இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள 24  சுங்கச்சாவடிகளில் பயன்பாட்டுக் கட்டணம் உயா்த்தி வசூலிக்கப்படுகிறது.

ஒரு வழி பயணத்துக்கு வாகன வகைகளுக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.120 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவுமுதல் இந்த கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் 48 சுங்கச்சாவடிகள் தமிழகத்தில் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் சட்டவிதிகளின்படி, 26 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ஆம் தேதியும், மற்றவற்றில் செப்டம்பர் 1-ஆம் தேதியும் சுங்கக் கட்டணத்தை மாற்றியமைப்பது வழக்கம்.

அந்தவகையில் நல்லூா் சுங்கச்சாவடியில் (சென்னை - தடா என்எச் 5) 40 சதவீதமும், சூரப்பட்டு சுங்கச்சாவடியில் 16 சதவவிகித கட்டணமும் உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். எரிபொருள் விலை உயர்வுக்கு மத்தியில் சுங்கக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.

பரனூர், சூரப்பட்டு, சென்னை சமுத்திரம், நெமிலி, வானகரம் ஆகிய சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைத்திருந்த நிலையில், தற்போது வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

வானகரம் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வரக்கூடிய கார், ஜீப், வேன்களுக்கு ரூ.45 ஆக இருந்த கட்டணம் ரூ.50 ஆகவும், ஒரே நாளில் திரும்பி வரும் பயணக்கட்டணம் ரூ.65 லிருந்து ரூ.75 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சூரப்பட்டு சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வரக்கூடிய கார், ஜீப், வேன்களுக்கு ரூ. 60 ஆக இருந்த கட்டணம் ரூ.70 ஆகவும், ஒரே நாளில் திரும்பி வரும் பயணக்கட்டணம் ரூ.90 லிருந்து ரூ.100 ஆக உயர்த்தி நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com