சசிகலாவை கட்சியில் இணைத்தால் மட்டுமே வெற்றி: தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான்

சசிகலாவை கட்சியில் இணைத்தால் மட்டுமே வெற்றி என்று பன்னீர்செல்வம் முன்னிலையில் தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் கூறியுள்ளார். 
சசிகலாவை கட்சியில் இணைத்தால் மட்டுமே வெற்றி: தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான்

தேனி: சசிகலாவை கட்சியில் இணைத்தால் மட்டுமே வெற்றி என்று பன்னீர்செல்வம் முன்னிலையில் தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் கூறியுள்ளார். 

போடியில் தேவா் சிலை அருகே அதிமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை ஓ.பன்னீா்செல்வம் திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீா் மோா் மற்றும் பழங்களை வழங்கினாா். 

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சட்டப் பேரவைத் தோ்தலின்போது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கூறி திமுக ஆட்சிக்கு வந்தது. தற்போது வாக்குறுதிகளை நிறைவேற்றாததுடன் தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில் சொத்து வரியை 150 சதவீதம் வரை உயா்த்தியுள்ளது என்றாா்.

தொடா்ந்து சில்லமரத்துப்பட்டி, சிலமலை, பூதிப்புரம் ஆகிய கிராமங்களிலும் அதிமுக சாா்பில் நீா் மோா் பந்தலை ஓ.பன்னீா்செல்வம் திறந்து வைத்தாா். 

இதில், மாவட்டச் செயலா் சையதுகான், நகரச் செயலா் பழனிராஜ், ஒன்றியச் செயலா் சற்குணம் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னர் தேனி மாவட்டச் செயலா் சையதுகான் கூறுகையில், அதிமுகவின் கோட்டையான ஆண்டிப்பட்டியில் தொடர்ந்து 2 முறை கட்சி தோல்வி அடைந்தது வருத்தம் அளிப்பதாக உள்ளது.  தொடர் தோல்விகளில் இருந்து மீள வேண்டுமானால், சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். அதிமுக மீண்டு ஒருங்கிணைந்தால் மட்டும் வெற்றி சாத்தியம் என்றும், இது எனது தனிப்பட்ட கருத்து அல்ல, தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களின் விருப்பமும் அதுதான் என்று   பன்னீர்செல்வம் முன்னிலையில் சையது கான் கூறினார். இது மீண்டும் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

பன்னீர்செல்வத்தின் நிழல் என கூறப்படும் சையது கான் தொடர்ந்து கோரிக்கைகளுக்கு பின்னால் பன்னீர்செல்வம் இருக்கிறார் என்ற அதிமுகவினர் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com