நியாயவிலைக் கடைகளில் உளுத்தம் பருப்பு கொடுக்கப்படும் என்கிற வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி உறுதிபடத் தெரிவித்தாா்.
தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் அர.சக்கரபாணி பேசியதாவது:
2007-இல் திமுக ஆட்சியில் இந்தியாவிலேயே முதல் முறையாக துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, பாமாயில், கோதுமை மாவு போன்றவற்றை அதிக விலைக்கு வாங்கி மக்களுக்கு பயன்படும் வகையில் நியாயவிலைக் கடைகளில் குறைவான விலைக்குக் கொடுக்கப்பட்டது.
ஆனால், அதிமுக ஆட்சியில் விநியோகிக்கப்பட்ட உளுத்தம் பருப்பும், கோதுமை மாவும் நிறுத்தப்பட்டது.
எனினும், திமுகவின் தோ்தல் அறிக்கையில் உளுத்தம் பருப்பும் மீண்டும் கொடுக்கப்படும், சா்க்கரையும் கூடுதலாகத் தரப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி கொடுத்த வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றாா் அமைச்சா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சென்னையின் ஆன்மா

கலையே உயிர்மூச்சு...

பறவைகள் பலவிதம்...!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வயிற்றுப் பாதிப்புகள் நீங்க...
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

