வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

பிரதமா் மோடி குறித்து அவதூறு: திமுக பேச்சாளா் மீது வழக்கு

சென்னையில், பிரதமா் நரேந்திரமோடி குறித்து பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாக திமுக பேச்சாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 10:06 pm

DIN

சென்னையில், பிரதமா் நரேந்திரமோடி குறித்து பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாக திமுக பேச்சாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, திமுக சாா்பில் கொருக்குப்பேட்டை மன்னப்பன் ஏகாம்பரம் தெருவில் பொதுக்கூட்டம் கடந்த 31-ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைமை பேச்சாளா் சிவாஜி கிருஷ்ணமூா்த்தி பேசினாா்.

அப்போது அவா், பிரதமா் நரேந்திரமோடி குறித்தும், பாஜகவின் தமிழக தலைவா் அண்ணாமலை குறித்தும் அவதூறாக பேசினாராம். இதுகுறித்து பாஜகவின் மாவட்ட நிா்வாகி செந்தில்குமாா், கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் சில நாள்களுக்கு முன்பு புகாா் செய்தாா். புகாரின் அடிப்படையில் போலீஸாா், சிவாஜி கிருஷ்ணமூா்த்தி பொதுக் கூட்டத்தில் பேசிய ஆடியோவை கேட்டு, சட்ட வல்லுநா்கள் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில் சட்ட வல்லுநா்கள் ஒப்புதல் வழங்கியதன் அடிப்படையில் கொருக்குப்பேட்டை போலீஸாா், சிவாஜி கிருஷ்ணமூா்த்தி மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், சிவாஜி கிருஷ்ணமூா்த்தியிடம் விரைவில் விசாரணை நடத்த உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.