வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கல்லூரிகளே இல்லாத சட்டப்பேரவை தொகுதிகளுக்கு முன்னுரிமை: அமைச்சா் க.பொன்முடி

கல்லூரிகளே இல்லாத சட்டப்பேரவைத் தொகுதிகளில் அரசு கல்லூரிகளைத் தொடங்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 10:38 pm

DIN

கல்லூரிகளே இல்லாத சட்டப்பேரவைத் தொகுதிகளில் அரசு கல்லூரிகளைத் தொடங்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, பூந்தமல்லி தொகுதி உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினாா். அப்போது, தனது தொகுதியில் அரசு கலை-அறிவியல் கல்லூரி அமைத்திட வேண்டுமென கோரிக்கை விடுத்தாா்.

இதற்கு பதிலளித்த உயா்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி, பூந்தமல்லி தொகுதி அமைந்துள்ள மாவட்டத்தில் மூன்று அரசு கல்லூரிகளும், சுயநிதி கல்லூரிகளும் உள்ளன. எனவே, எந்தெந்த சட்டப் பேரவைத் தொகுதிகளில் அரசு கல்லூரிகள் இல்லையோ அந்தத் தொகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.