உசிலம்பட்டி: குருத்தோலை ஞாயிறையொட்டி சிலுவைகளை கையில் ஏந்தி சென்ற பக்தர்கள்

 மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதி தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறையொட்டி திரளானோர் குருத்தோலைகளால் ஆன சிலுவைகளை கையில் ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர் .
உசிலம்பட்டி: குருத்தோலை ஞாயிறையொட்டி சிலுவைகளை கையில் ஏந்தி சென்ற பக்தர்கள்


உசிலம்பட்டி:  மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதி தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறையொட்டி திரளானோர் குருத்தோலைகளால் ஆன சிலுவைகளை கையில் ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர் .

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளுக்கு முன் வரும் ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. தவக் காலத்தின் முக்கிய நிகழ்வாக இது கருதப்படுகிறது. சகரியாவின் தீர்க்க தரிசனம் நிறைவேறும் வகையில் இயேசு கிறிஸ்து ஜெருசலேம் நகரில் கோவேறு கழுதையின் மேல் பவனியாக சென்றார் .

யூதர்களின் ராஜாவாகிய இயேசு கிறிஸ்து பவனியாக செல்லும்போது ஜெருசலேம் மக்கள் அவரை தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என வழி நெடுக வரவேற்றனர். அப்போது குருத்தோலைகளை மக்கள் பிடித்து இயேசுவை வரவேற்றதாக வேதாகமம் வெளிப்படுத்துகிறது.

இதை நினைவு கூறும் வண்ணம் உசிலம்பட்டி பேரூர் சாலையில் தேவாலயத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட தேவாலயங்கள் குருத்தோலைகளால் அலங்கரிக்கப்பட்டது .

சிறுவர் - சிறுமியர் உள்பட திரளானோர் கலந்துகொண்டு குருத்தோலைகளால் செய்யப்பட்ட சிலுவைகளை கையில் ஏந்திய படி ஓசன்னா பாடுவோம் , பவனி செல்கிறார் ராஜா உள்ளிட்ட பாடல்களை பாடி வீதிகள் தோறும் ஊர்வலமாகச் சென்றனர் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com