
எடப்பாடியில் நஞ்சுண்டேஸ்வரர்-தேவகிரி அம்மன் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக கொடியேற்றத்துடன் தொடங்கிய நஞ்சுண்டேஸ்வரர் சித்திரை தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, சுவாமி திருக்கல்யாண வைபவம், இன்று வெள்ளிக்கிழமை காலை விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மணமேடையில், நஞ்சுண்டேஸ்வரர் -தேவகிரி அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தொடர்ந்து தேவகிரி அம்மனுக்கு மங்கலன் நான் சூட்டும் நிகழ்ச்சி மங்கல இசை முழங்க நடைபெற்றது.
இந்நிகழ்வில் எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் அறங்காவலர் குழுவினர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.