130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 2.05 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

தமிழகம் 2021-30 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறும் வகையில், மாநிலத்தின்
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சென்னை: தமிழகம் 2021-30 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறும் வகையில், மாநிலத்தின் உற்பத்தித் துறையானது பொருளாதார வளர்ச்சியில் மையப் புள்ளியை எடுக்க வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

2022-23 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத்தில் தங்கம் தென்னரசு சமர்ப்பித்த கொள்கைக் குறிப்பின்படி, தமிழகம் உற்பத்தி சூழல் அமைப்பில் நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது.  

உற்பத்தித் துறையில் சுமார் 23 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கவும், 46 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

2021-22 நிதியாண்டில், மத்திய அரசு நிறுவனங்களுடன் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் ரூ.68,375 கோடி முதலீட்டில் 2.05 லட்சத்துக்கும் அதிகமான நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ பாகங்கள், தொழில்துறை பூங்காக்கள், இலவச வர்த்தகக் கிடங்கு மண்டலங்கள், ஐடி/ஐடிஇஎஸ், பொது உற்பத்தி, உணவு பதப்படுத்துதல், காலணி, மருந்து மற்றும் ஜவுளி, மற்றும் மரச்சாமான்கள் உற்பத்தி போன்ற புதிய துறைகளில் முதலீடுகள் குவிந்துள்ளது என்று கூறினார்.

2030-ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை எட்டுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்குத் தேவையான பொது உள்கட்டமைப்பை மேம்படுத்த, தொழில் மற்றும் தொழில் சங்கங்களின் பங்களிப்புடன் ரூ.100 கோடி சிறப்பு நிதியை தமிழக அரசு பங்களிக்கிறது என்று அமைச்சர்  தென்னரசு கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com