இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மயிலாடுதுறை: ஆளுநர் வாகன அணிவகுப்பு - கருப்புக் கொடி வீசி எதிர்ப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தமிழக ஆளுநரின் கார் அணிவகுப்பு மீது, கருப்புக் கொடிகள் வீசப்பட்டன.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:45 pm

DIN


மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தமிழக ஆளுநரின் கார் அணிவகுப்பு மீது, கருப்புக் கொடிகள் வீசப்பட்டன.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் செவ்வாய்க்கிழமை பங்கேற்றார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பாததைக் கண்டித்து, சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் ஆளுநருக்குக் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் மயிலாடுதுறையை அடுத்த மன்னன்பந்தலில்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

Story image

இதன்படி, அங்கு சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் கைகளில் கருப்புக் கொடிகளுடன் குழுமினர்.  அதேபோல, அந்தப் பகுதியில் காவல் துறையினரும் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர். போராட்டக் குழுவினர் ஆளுநரின் காரை வழிமறித்திட முடியாத வகையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Story image

இருப்பினும், அந்த வழியே ஆளுநரின் கார் அணிவகுப்பு சென்ற போது, போராட்டக் குழுவினர் திடீரென கருப்புக் கொடிகளை ஆளுநரின் காரை நோக்கி வீசினர். அந்தக் கொடி அவர் மீது விழவில்லை எனினும்,  போராட்டக்காரர்கள் தொடர்ந்து கருப்புக் கொடியை ஆளுநரின் வாகன அணிவகுப்பு மீது வீசினர். இதனால், அந்தப் பகுதியில் சில நிமிடங்கள் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.